தமிழகத்திற்கு எப்போது பருவமழை?

சனி, 20 அக்டோபர் 2018 (20:41 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பொழிய வாய்புள்ளது என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
ஆனால், அந்த அளவிற்கு மழை ஒன்றும் பொழிந்ததாக தெரியவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதன்படி, மேலடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதால் தமிழகம், புதுவையில் 26 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் விட்டுவிட்டு மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்