ஆம்னி வேன் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் விபத்தில் பரிதாபம் பலி.. நாமக்கல் பகுதியில் பெரும் சோகம்..!

Mahendran

செவ்வாய், 11 ஜூன் 2024 (10:31 IST)
நாமக்கல் மாவட்டத்தில் கார் ஓட்டி பழகிய 14 வயது மற்றும் 17 வயது சிறுவர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலையில் சில பெற்றோர்கள் சிறு வயதிலேயே வண்டி ஓட்ட பழகி கொடுப்பதால் சில விபரீதங்கள் ஏற்படுகின்றன. 
 
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவர்கள் ஓட்டி சென்ற ஆம்னி வேன், சாலையில் சென்ற மற்றொரு கார் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில்  சுக்குநூறாக ஆம்னி வேன் நொறுங்கியதாகவும் தெரிகிறது.
 
ஆம்னி வேனை ஓட்டி சென்ற 14 வயதான சுதர்சனம், உடன் சென்ற 17 வயதான லோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்..
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்