23 வயது மகனை இரும்புக்கம்பியால் அடித்தே கொன்ற தாய்.. சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (10:48 IST)
சென்னையைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது 23 வயது மகனை இரும்பு கம்பியால் அடித்தே போன்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த செல்வி என்ற 38 வயது பெண்ணுக்கு 23 வயதில் பூவரசன் என்ற மகன் இருந்தார். இந்த நிலையில்  அடிக்கடி செல்வி மன அழுத்ததால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென மன அழுத்தம் ஏற்பட்ட செல்வி தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் பூவரசனை இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அவர் தன்னையே இரும்பு கம்பியால் தாக்கிய நிலையில் மயங்கி விழுந்து உள்ளார். 
 
இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் யாரோ மர்ம நபர்கள் தாய், மகனை அடித்து விட்டு சென்றதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது தாய் செல்வியே தனது மகனை அடித்து கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் இருக்கும் அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்