சென்னையில் அடுத்து நொறுக்கிய KGF வசூல் - எத்தனை கோடி தெரியுமா?

திங்கள், 25 ஏப்ரல் 2022 (10:31 IST)
கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 ஏப்ரல் 14ம் தேதி வெளியானது. 
 
இப்படம் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருந்தாலும் ஆங்காங்கே எமோஷன், செண்டிமெண்ட் காட்சிகள் அடங்கி படத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் வலு சேர்த்துள்ளது. இப்போது வரை உலகம் முழுவதும் ரூ. 1000 கோடியை தொட வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 
 
இதன் வசூல் தமிழகத்தில் கூட ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது. இந்த நிலையில் தான் Kgf 2 படத்தின் 11 நாள் சென்னை வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 11 நாள் முடிவில் படம் ரூ. 7 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னையில் ரூ. 84 லட்சம் வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்