12 வகுப்பு தேர்வு எப்போது? தேதியை வெளியிட்ட தமிழக அரசு!!

புதன், 17 பிப்ரவரி 2021 (10:08 IST)
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இதுவரை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தமிழகத்தில் மே 24-க்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த ஆண்டே 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்காத சூழலில் இந்த முறை கண்டிப்பாக நடத்தப்படும் என கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் போதுத்தேர்வு தேதி ,மற்றும் அட்டவணை வெளியிடப்படும் என கூறினார். 
 
இந்நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு மே 3 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 3 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்