இஞ்சியை சாறு எடுத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் செரிமான மண்டலத்தை சீராக செயல்பட முடியாமல், நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை சரிசெய்ய முடியும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து, காலையில் ஒரு கரண்டி வீதம், ஒரு வாரம் குடித்துவர, நீரிழிவு குறையும்.
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர, தொடக்கத்தில் உள்ள ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.