பைக்கில் 114 கிமீ வேகம்.. சென்னை இளைஞர்களின் பரிதாப முடிவு

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (07:34 IST)
பைக்கில் 114 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தற்கால இளைஞர்கள் பைக்கில் மிக வேகமாக சென்று விலைமதிப்பில்லா உயிரை இழந்து வருவது குறித்த விழிப்புணர்வு அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு வருகிறது 
 
நிதான வேகத்தில் பைக்கில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தரமணியில் 114 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை தரமணி அருகே பிரவீன் என்பவர் தனது நண்பர் ஹரி கிருஷ்ணன் என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார். அவர் 114 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதை பின்னால் உட்கார்ந்திருந்த ஹரிகிருஷ்ணன் வீடியோ எடுத்துள்ளார் 
இந்த நிலையில் திடீரென அவர்கள் சென்ற பைக் வேன் மீது மோதியதை அடுத்து இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 114 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று தனது விலைமதிப்பில்லா உயிரை இழந்த இளைஞர்கள் குறித்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்