பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: இரண்டு பேர் 499 மதிப்பெண் எடுத்து முதலிடம்

Webdunia
புதன், 25 மே 2016 (10:04 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது. இதில் இரண்டு பேர் 499 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.


 
 
விருதுநகர் மாவட்டம் நோபல் பள்ளியை சேர்ந்த சிவகுமார், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் எஸ்.ஆர்.வி.எக்ஸல் பள்ளியை சேர்ந்த பிரேமசுதா ஆகியோர் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
 
498 மதிப்பெண்கள் பெற்று 50 பேர் மாநில அளவில் 2-ஆம் இடம் பிடித்துள்ளனர். 497 மதிப்பெண்கள் பெற்று  224 பேர் 3-ஆம் இடம் பிடித்துள்ளனர். 10-ஆம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு 93.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
வழக்கம் போல மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 95.9% மாணவிகளும், 91.3% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
713 பேர் தமிழில் 100 எடுத்துள்ளனர். ஆங்கிலத்தில் 51 பேர் 100 மதிப்பெண்ணும், கணிதத்தில் 18754 பேர் 100 மதிப்பெண்ணும், அறிவியலில் 18642 பேர் 100 மதிப்பெண்ணும், சமூக அறிவியலில் 39398 பேர் 100 மதிப்பெண்ணும் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்