'108' ஆம்புலன்சுக்கு கட்டணமா? ஸ்டாலின் விளக்கம்!

திங்கள், 17 மே 2021 (12:02 IST)
'108' ஆம்புலன்சுக்கு கட்டணம் என தவறாக செய்தி போடுகின்றனர் என முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆம்புலன்ஸ் சேவைகளின் தேவையும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளில் அதிகமான பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கனா நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தமிழக அரசு அறிவித்தது.
 
அதன்படி ஆம்புலன்ஸில் உள்ள வசதிகளை பொறுத்து ரூ.1000 முதல் ரூ.4000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண ஆம்புலன்ஸ் சேவைக்கு 10 கி.மீ தூரத்திற்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 கி.மீட்டருக்கு மேல் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் வசதி உள்ள ஆம்புலன்ஸ்களில் 10 கி.மீட்டருக்கு மேல் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.50 ரூபாயும், வெண்டிலேட்டர் உள்ள ஆம்புலன்ஸ்களில் 10 கி.மீட்டருக்கு மேல் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.100ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், தனியார் ஆம்புலன்ஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், '108' ஆம்புலன்சுக்கு கட்டணம் என தவறாக செய்தி போடுகின்றனர். இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றார் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்