இனி ரெம்டெசிவிருக்கு காத்திருக்க தேவையில்லை; மருத்துவமனைகளுக்கு நேரடி விநியோகம்!

ஞாயிறு, 16 மே 2021 (13:21 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக ரெம்டெசிவிர் மருந்திற்கு மக்கள் குவியும் நிலையில் நேரடியாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்தை அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு முக்கிய நகரங்களின் அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவிரை விற்க ஏற்பாடு செய்தது.

இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதுவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்துகளை தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கவும் அங்கிருந்து நோயாளிகளுக்கு எளிதில் கிடைக்க பெறவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படும் தனியார் மருத்துவமனைகள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம். அதேசமயம் அரசிடமிருந்து பெறப்பட்ட மருந்து அதே விலைக்கு மக்களுக்கு அளிக்கப்படுகின்றனவா, வாங்கப்பட்ட மருந்துகள் முறைப்படி நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டனவா என்பதையும் கண்காணிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்