மற்ற மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூட அனுமதி அளிக்காமல் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அனைத்து பாஜக நிர்வாகிகள், தொண்டர்களும் முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து முதல்வர் முகவரிக்கு அஞ்சல் அட்டை அனுப்புமாறு நூதன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்டு மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்திலிருந்து 1001 விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை முதல்வருக்கு பாஜக நிர்வாகிகள் அனுப்பினர். மற்ற மதத்தினருக்கு பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிக்கும் தமிழக முதல்வர் இந்துக்களுக்கு மட்டும் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிக்காததை சுட்டிக்காட்டும் வகையில் இந்த வாழ்த்து அட்டைகள் அனுப்பப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.