பெகாசஸ் விவகாரம், விலையேற்றம், இப்படியே விடக் கூடாது! – கறுப்பு கொடி போராட்டத்திற்கு திமுக கூட்டணி அழைப்பு!

திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:01 IST)
மத்திய அரசின் தனியார் மயமாக்கல், விவசாய சட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. அதுபோல சமீப காலமாக பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றல் போன்ற செயல்களுக்கு எதிராகவும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்துவதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் முடிவெடுத்துள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ”மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30 வரை பல்வேறு போராட்டங்களை நடத்த சோனியா காந்தி தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 20ம் தேதியன்று மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து காலை 10 மணியளவில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி தங்கள் வீடுகள் முன்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்படுகிறது” என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்