சென்னை எம்.எம்.டி.ஏ பேருந்து நிலையத்திலிருந்து பிராட்வேவுக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்தில் பயணி ஒருவர் டிக்கெட் கேட்டு 10 ரூபாய் நாணயத்தை நடத்துனரிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்க மறுத்த நடத்துனர் டிப்போவில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது எனாறும், ரூபாய் நோட்டை தருமாறும் கூறியுள்ளார். பயணியிடம் ரூபாய் நோட்டு இல்லாததால் அதனை ஏற்கும்படி கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்காத நடத்துனர் ரூபாய் நோட்டு இல்லையெனில் பேருந்தை விட்டு இறங்கவும் என்று கூறினாராம்.
சூழ்நிலையை உணர்ந்த பயணி ஒருவர் அந்த நாணயத்தை பெற்று கொண்டு ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அதன்பிறகே பயணிக்கு நடத்துனர் டிக்கெட் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பயணிகள் அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு டிப்போக்களில் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்பது வினோதமாகவே உள்ளது.