1.5 கிலோ தங்கம் கடத்தல்..... பயணிகள் 3 பேர் கைது

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (00:07 IST)
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 73.42 லட்சம் மதிப்பிலான 1.5 கிலோ தங்கம் மற்றும் ஐபோன்களை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றி கடத்தல் பயணிகள் 3 பேரை கைது செய்து விசாரணை.
 
துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னை மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த 3 பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 
 
அவர்களை நிறுத்தி அவர்களுடைய உடமைகளை சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த லேப்டாப்பை  திறந்து பார்த்தபோது அந்த லேப்டாப்பின் அடிப்பாகத்தில் சிறு பிளாஸ்டிக் கவர்கள் இருந்தன. அவைகளை பிரித்து பார்த்தபோது அதில் மொத்தம் 12 கவர்களில் தங்க பசையை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.3  பயணிகளிடம் இருந்து, 1.5 கிலோ தங்க பசை இருந்ததை கைப்பற்றினர். அவர் மேலும் அவர்களை சோதனை செய்தபோது 2 ஐபோன்கள்  மறைத்து வைத்திருந்தனர். அவைகளையும்  பறிமுதல் செய்தனர். 
 
இவர்களிடமிருந்து தங்க பசை மற்றும் ஐபோன்களில் மதிப்பு ரூ.73.42 லட்சம் இருந்ததை பறிமுதல் செய்தனா். இதையடுத்து மூன்று பேரையும் சுங்க அதிகாரிகள் கைது செய் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்