பொங்கலையொட்டி சிறப்பு பேருந்துகளில் 1.33 லட்சம் பேர் முன்பதிவு- போக்குவரத்துத் துறை

திங்கள், 9 ஜனவரி 2023 (15:13 IST)
பொங்கல் தீபாவளி உள்ளிட்ட முக்கிய  பண்டிகையின்போது  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தம் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு  பேருந்துகளை தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை இயங்கி வருகிறது.
 
அந்த வகையில் பொங்கல் திருநாள் கொண்டாட    மக்கள் அவரவர்   சொந்த ஊர்களுக்குச் செல்லும் வசதியை கருத்தில் கொண்டு ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை  16,932 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்தது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல பொதுமக்கள் 1,33,659 பபேர் முன்பதிவு செய்துள்ளனர்.
 

ALSO READ: பொங்கல் பண்டிகையை ஒட்டி10,749 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர்
 
சென்னையில் இருந்து மட்டும் 60,799 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்