மாற்றுத்திறனாளி ஒருவர் கண்பார்வை சான்றிதழ் வேண்டி மருத்துவர் ஸ்ரீதரை அணுகியுள்ளார். அதற்காக அவர் அந்த மாற்றுத்திறனாளியிடம் 200 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். மாற்றுத்திறனாளி அளித்த புகாரின் பேரில் மருத்துவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் மனமுடைந்த அவர், பொன்னேரியிலுள்ள தனது நண்பரின் பண்ணை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.