எல்.முருகனின் யாத்திரைக்கு அனுமதி வழங்க கூடாது: டிஜிபி அலுவலகத்தில் மனு

புதன், 28 அக்டோபர் 2020 (11:57 IST)
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அவர்கள் பொறுப்பு ஏற்றதில் இருந்து பாஜக குறித்த பரபரப்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து பாஜக பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது
 
அந்த வகையில் நவம்பர் 6ஆம் தேதி முதல் வெற்றிவேல் என்ற யாத்திரையை ஆரம்பிக்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் அறிவித்திருந்தார். முருகனின் அறுபடை வீடுகளுக்கும் செல்லும் இந்த யாத்திரை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
எல் முருகனின் இந்த யாத்திரைக்கு ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார் 
 
இந்த நிலையில் இந்திய தேசிய லீக் கட்சி டிஜிபி அலுவலகத்தில் எல்.முருகன் நடத்தும் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் மனு ஒன்றை அளித்துள்ளது. எல்.முருகன் அவர்களின் வெற்றிவேல் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நவம்பர் ஆறாம் தேதி தொடங்க உள்ள வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் இந்திய தேசிய லீக் கட்சி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது
 
இந்த மனுவின் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து எல் முருகனின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்