அது வரையிலும் தன் போக்கில் அலைந்து, திரிந்து கொண்டிருந்த மனதை கட்டிப் போடுவது ஒன்றும் அவ்வளவு எளிதான செயல் இல்லை. தியானத்தில் அமர்ந்து கொண்டு நம் மனம் போடும் ஆட்டத்தை சிவனே என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் போதும். அதுவே ஆடி அடங்கி விடும். மாறாக அதை அடக்கி, ஒடுக்கி, அதன் ஆட்டத்தை நிறுத்த வேண்டும் என்று நினைத்தால் அதுவே பெரிய போராட்டமாக முடியும்.