ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 8, 17, 26

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (18:38 IST)
ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
எந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காண முடியும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.

தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

பெண்களுக்கு மன குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். கலைத்துறையினர் அறிவுரைகள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்துறையினர் சாமர்த்தியமாக செயல் பட்டு வெற்றி காண்பார்கள். மாணவர்கள்  புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்