நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2016 (17:10 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மகளின் அலட்சியப் போக்கு மாறும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமைவார்.
 
வழக்கில் திருப்பம் ஏற்படும். பூர்வீகச் சொத்தை புதுபிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். பால்ய நண்பர்கள் உங்களை தேடி வந்துப் பேசுவார்கள். என்றாலும் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அரசியல்வாதிகளே! பினாமிகளின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும். வி.ஐ.பிகளால் இனம் கண்டறியப்படும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 9, 10, 1, 3, 12 
அதிஷ்ட எண்கள்: 4, 6
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், சில்வர் கிரே
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
அடுத்த கட்டுரையில்