மார்ச் 2021 - எண்ணியல் பலன்கள்: 2, 11, 20, 29

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (14:52 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
நலிந்தவர், நியாமுள்ளவர்களுக்காக போராடும் குணமுடைய இரண்டாம் எண் வாசகர்களே இந்த மாதம் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன்மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். பொருளாதாரம் சார்ந்து நிறுத்திய விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும்.

அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. 
 
பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு மல்லிகை அர்ப்பணித்து வழிபடுவது நன்மை தரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்