மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (15:09 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கூர்மையான வார்த்தைகளை பிரயோகிக்கும்  ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண் செலவு  குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில்  வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த  நேரத்தில்  பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த  உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள்  நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும்.

பரிகாரம்:  சனிகிழமையன்று விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்