ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9,18,27

Webdunia
செவ்வாய், 31 மே 2016 (19:08 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். சகோதரர்களால் பயனடைவீர்கள். 
 
புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் மதிக்கப்படுவீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். பெற்றோர் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். என்றாலும் மாதத்தின் மையப்பகுதியிலிருந்து வீண் சந்தேகம், ஏமாற்றம், மனயிறுக்கம் வரக்கூடும். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பால்ய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். 
 
அரசியல்வாதிகளே! தலைமையின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். 
 
கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். கடின உழைப்பால் சாதித்துக் காட்டும் மாதமிது.   
 
அதிஷ்ட தேதிகள்: 9, 1, 6, 9, 10
அதிஷ்ட எண்கள்: 1, 5
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், சில்வர்கிரே
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி
அடுத்த கட்டுரையில்