டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (16:28 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். எதிர்பார்த்த பணம் வரும்.

குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். லோன் கிடைக்கும். சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

புதன் வலுவாக இருப்பதால் கமிஷன், ஷேர் வகைகளால் லாபமடைவீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதைக் கூடும். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து வீண் செலவு, அலைச்சல், திடீர் பயணங்கள் வந்துப் போகும். ஆனால் உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள்.

சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்தக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரகள் உதவுவார்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். மேலதிகாரி ஆதரிப்பார். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். விட்டதை பிடிக்கும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 4, 1, 6, 8, 22
அதிஷ்ட எண்கள்: 3, 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, மயில் நீலம்
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
அடுத்த கட்டுரையில்