ஆகஸ்டு மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (17:50 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.


 


பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்குவீர்கள். ஆனால் யாரையும் நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் முக்கிய விஷயங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று வருவது நல்லது. மாதத்தின் மையப்பகுதியிலிருந்து தொட்டதெல்லாம் துலங்கும். 
 
புது பொறுப்புகள் தேடி வரும். வி. ஐ. பிகளும் அறிமுகமாவார்கள். பணவரவு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வாகன வசதிப் பெருகும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். ஆனால் சில காரியங்கள் தடைப்பட்டு முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். 
 
அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். 
 
கன்னிப் பெண்களே! திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். பங்குதாரர் பணிந்து வருவார். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சக ஊழியர்களும் நட்புறவாடுவார்கள். 
 
கலைத்துறையினர்களே! கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். வசதி, வாய்ப்புகள் பெருகும் மாதமிது.  
     
அதிஷ்ட தேதிகள்: 4, 6, 22
அதிஷ்ட எண்கள்: 1, 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பிங்க்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
அடுத்த கட்டுரையில்