ஆகஸ்ட் 2021 - 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (09:49 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
 
எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் கொண்ட ஆறாம் எண் அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல பலன்கள் நடக்கும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள்  விலகிச் சென்று விடுவார்கள். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன்  தரும்.

தொழில் வியாபாரம் லாபகரமாக  நடக்கும். தொழில் விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து உற்சாகமாக காணப்படுவார்கள். எடுத்த காரியம் வெற்றி பெறுவதால் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். 

கணவன் மனைவிக்கிடையே இருந்த  கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனசஞ்சாரம் நீங்கி நிம்மதி உண்டாகும். பெரியோர் பாராட்டு கிடைக்கும்.
 
பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். செல்வ சேர்க்கை ஏற்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்