ஆகஸ்ட் 2021 - 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (09:39 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
 
அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். செலவு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். மாத தொடக்கத்தில் அடுத்தவருக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரலாம் கவனமாக இருப்பது நல்லது. புதிய நட்பு உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான அலைச்சலும் புதிய ஆர்டர் பற்றிய கவலையும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.  குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சனை தீரும். 

கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. 
 
மாணவர்களுக்கு  கல்வியில் வெற்றி பெற தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
 
பரிகாரம்: முருகனை வணங்கி வர தொல்லைகள் நீங்கும். நன்மை உண்டாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்