ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (17:23 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மனதில் பட்டதை உடனடியாக செயலாற்றக்கூடிய இரண்டாம் எண் அன்பர்களே. செயல்திறமை அதிகரிக்கும். நிலுவையில் உள்ள் வேலையை அசார்தியாமாக செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சிறிது கவனமாக கையாளுதல் வேண்டும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.

தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிசுமை குறைந்து காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நிங்கள் கூறும் சொல்லிற்கு நன்மதிப்பை இருக்கும். ஆன்மீக ஈர்ப்பு  இருக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று நந்தீஸ்வரரை வணங்குவதன் மூலம் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்