ஆகஸ்டு மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (15:57 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவரான  ஐந்தாம் எண் அன்பர்களே இந்த வாரம் வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்.


தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும்.  அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். பெண்களுக்கு காரிய தடைகள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

பரிகாரம்:  பெருமாளுக்கு துளசியை மாலையாக சாற்றி வணங்க எல்லா தடைகளும் விலகும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன்
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்