ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (18:48 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:  நாயகர் சுக்கிரன்:

நடக்காது என்று எதையும் நினைக்காமல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற துடிப்புடைய ஆறாம் எண் வாசகர்களே இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக  நடக்கும். மாத தொடக்கத்தில் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு  நன்மையும் உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.

தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்து செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும்.  உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர் காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் நிதானப் போக்கு  காணப்படும்.

பெண்களுக்கு எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் சிறப்பானவை.
தெற்கு, மேற்கு திசை அனுகூலமாக இருக்கும்.
2, 6, 7 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.
பரிகாரம்: பெருமாள் கோவிலில் தாயாருக்கு வெள்ளிக்கிழமையில் மல்லிகை மலரை அர்ப்பணித்து வர பொருள் வரத்து கூடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்