ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (18:39 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: நாயகர் சந்திரன்:
 

சொன்ன சொல்லை காப்பாற்றும் குணமுடைய இரண்டாம் எண் வாசகர்களே இந்த மாதம் உங்களது கருத்துக்கு  மற்றவர்களிடம்  வரவேற்பு இருக்கும். மாத தொடக்கத்தில் பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும்.  தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க  தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள்  குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த  பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.  கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள்  நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை  அவரால் உதவி உண்டாகும். 

பெண்களுக்கு தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள்  மேற்கொள்வீர்கள். உற்சாகம்  உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும்.

திங்கள், வெள்ளி ஆகிய நாட்கள் சிறப்பானவை.
தெற்கு, மேற்கு திசை அனுகூலமாக இருக்கும்.
2, 6, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.
பரிகாரம்: நவகிரகத்தில் சந்திரனுக்கு நெல் பொங்கல் செய்து நைவேத்யம் செய்து விநியோகம் செய்ய பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில்  மகிழ்ச்சி நிலவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்