வாணலியில் எண்ணய் ஊற்றி வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் ஈரலை போட்டு உப்பு சேர்த்து பிரட்டவும்.
மஞ்சள்தூள், கறிமசால்தூள் சேர்த்து தேவையான உப்பு போட்டு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றி ஈரல் வெந்தவுடன் இறக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும். சுவையான ஈரல் பிரட்டல் தயார்.