ஒன்பதாம் படி: மூன்று மூர்த்திகளின் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) பொம்மைகளையும், அவர்களின் தேவிகளின் பொம்மைகளையும் வைத்து அலங்கரிக்கலாம். ஆதிபராசக்தி அன்னை நடுநாயகியாக வைக்கலாம், தசதாவதாரம் பொம்மைகளை வைக்கலாம்.
நவராத்திரி நாட்களில் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்கள், கன்னி பெண்களுக்கு குங்குமம், மஞ்சள், வெற்றிலை பாக்கு, பூ, பழம், சீப்பு, கண்ணாடி, தட்சணை, ரவிக்கை, சுண்டல், பாயசம் அல்லது ஏதேனும் நைவேத்தியத்தை கொடுத்தால் நற்பலன்கள் உண்டாகும். அவரவர்களின் வசதிக்கேற்ப பொருட்களை வழங்கலாம். ஏதேனும் ஒரு பழத்தை வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ்சள் வைத்தும் கொடுக்கலாம்.