சிவலிங்கத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல பாபங்கள் கழன்று ஓடும்.
சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம், வேள்விகள் செய்து இப்பூஜையினை செய்பவர்கள் சிவலோகத்தில் அனந்தகாலம் வாழ்வார்கள்.
தீர்த்த யாத்திரையோ, யாகமோ செய்யாமலே சிவலிங்க பூஜையினால் முக்தியடைவான். சிவலிங்கத்தை அபிஷேகம் செய்த தீர்த்தத்தாலே சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், சர்வ யக்ஞம் செய்த பலனும் கிடைத்துவிடும்.