நவராத்திரியின் ஒன்பது நாட்களில் சக்தியின் ஒன்பது அம்சங்கள்
நவராத்திரியின் முதல் நாளில் துர்கையை சாமுண்டியாகவும், இரண்டாம் நாளில் வராகியாகவும், மூன்றாம் நாளில் இந்திராணியாகவும் எண்ணி வழிபட வேண்டும். நவராத்திரியின் நான்காம் நாளில் மகாலட்சுமியை வைஷ்ணவி தேவியாகவும், ஐந்தாம் நாளில் மகேஸ்வரி தேவியாகவும், ஆறாம் நாளில் கௌமாரி தேவியாகவும் பாவித்து பூஜிக்க வேண்டும்.
அனைத்து கலைகளையும் அள்ளி வழங்கும் சரஸ்வதி தேவியை நவராத்திரியின் ஏழாம் நாளன்று சாம்பவியாகவும், எட்டாம் நாளன்று நரசிம்மதாரிணியாகவும், ஒன்பதாம் நாளன்று சரஸ்வதியாகவும் எண்ணி வழிபடுதல் வேண்டும்.
நவராத்திரி வழிபாட்டால் கன்னிப் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவர். சுமங்கலி பெண்கள் பெறுவது மாங்கல்ய அனுகூலம். மூத்த சுமங்கலிப் பெண்கள் மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி பெறுவர். புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி, விஜயதசமியில் முடிகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால், “தசரா’ என்று அழைக்கின்றனர்.
வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீத்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி. இவர்கள் சரஸ்வதியின் அம்சங்கள். உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னத தத்துவம்.
மூன்றாம் நாள்:
துர்கா அஷ்டோத்திர பூஜை. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா நவரத்ன மாலா பாராயணம்.