நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படும் கோதுமை !!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (10:42 IST)
கோதுமையில் புரோட்டீன் சத்து வளமான அளவில் உள்ளது. எனவே கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.


தினமும் கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.

கோதுமையில் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன, இவை புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.

கோதுமையில் நார்ச்சத்து உள்ளது. கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் எளிதில் செரிமானமாகும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படாது.

எலும்பு அழற்சி உள்ளவர்கள் தினமும் உணவில் கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சேர்த்து வருவது நல்லது, ஏனெனில் இவை எலும்புகளில் ஏற்படும் அழற்சியைத் தடுக்க உதவுகிறது.

இதய நோய் உள்ளவர்கள், கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தியை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றில் செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலிலிருந்து விடுபட உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்