நாவல் பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் வைட்டமின் ஏ, சி உள்ளதால் கண்பார்வை திறனை அதிகரிக்கும்.
நாவல்கொட்டை - பேதியை நிறுத்தும், ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும். நாவல் மரப்பட்டை - ரத்த அழுத்தம், வாய்ப்புண், தொண்டைப்புண் இவைகளைக் குணமாக்கும்.
காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நாவல் பழத்தினாலுண்டாகும் தீங்கை முறிக்க, நெல்லிக்காயை மென்று தின்று குளிர்ந்த நீர் குடிக்க வேண்டும்.