கிவி பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!!

கிவி கனியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அலவில் உள்ளது. இதன் காரணாமாக உடலுன் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக் கனியை அச்சமில்லாமல் உண்ணலாம். பொதுவாக வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம்  பெற்றுள்ளது.
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும் கிவி பழத்தில் ஃபோலேட் என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது.
 
குழந்தைகளுக்கு ஆஸ்துமா மூச்சிழுப்பு சளி ஆகியவை இருந்தால் கிழிப்பழம் சாப்பிட்டு வந்தால் அவற்றை குணப்படுத்தும்.
 
இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க துணைபுரிகின்றது! இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். 
 
கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள  உதவுகிறது.
 
மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகச் செயல்படுகின்றது. மேலும் நுரையீரல்கள் செயல்திறனை அதிகரிக்க இந்தக் கனி பயன்படுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்