சீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சரும வறட்சி உள்ளவர்கள் சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும்.
சீதாப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துப்பொருட்களால், உடலில் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்தச்சோகை நோயை போக்கும். மேலும் உடல் சோர்வை போக்கி உடலுக்கு புத்துணர்வு தரும்.