கடுக்காயில் உள்ள மருத்துவ பண்புகள் என்ன...?

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (12:56 IST)
கடுக்காய் சருமத்தை சுத்தப்படுத்தும். இது உங்கள் உடலின் நச்சுகளை அகற்றும் என்பதால், கடுக்காய்பொடியை உட்கொள்வதால் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தும்.


கடுக்காயில் மலமிளக்கிய பண்புகள் உள்ளன. இரவு தூங்குவதற்கு முன்பு கடுகாய் பொடியை ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பல வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இரத்தக் கசிவு, பிற ஈறு நோய்கள், நோய்த்தொற்றுகள் மற்றும் பற்களின் பிரச்சினைகள் போன்ற பல் பிரச்சினைகளுக்கு கடுக்காய் மிகவும் நல்லது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கடுக்காய் அறிவுறுத்தப்படுவதில்லை. இது குறித்து மருத்துவரை அணுகுவது நல்லது. நீரிழிவு நோயாளிகள் மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு கடுக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயிற்றுப் பசியைத் தூண்டும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். வாத, பித்த, கபம் ஆகியவற்றால் வரும் பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும்.

கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டால் வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்