வெங்காய சாற்றை பயன்படுத்தி என்னவெல்லாம் ஆரோக்கிய நன்மைகள் !!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (09:54 IST)
வெங்காயத்தில் அதிக அளவு வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது. கால்சியம், இரும்புச்சத்து மற்றும் தரமான புரத சத்தும் உள்ளது. மிக குறைந்த அளவு சோடியம் மற்றும் பூஜ்ய அளவு கொழுப்பு உள்ளது.


ஆலிவ் எண்ணெய்யை 15 நிமிடம் தலையில் தேய்த்து பின்னர் வெங்காயச் சாற்றினைக் கொண்டு மசாஜ் செய்து 10 நிமிடத்துக்குப் பின் ஷாம்பு போட்டு மிதமான சுடுநீரில் தலையை அலசினால் தலைமுடி நன்கு வளரும்.

வெங்காயத்தில் குர்செடின், ஃபிளாவனாய்டு எனப்படும் ஒரு வகை ஆக்ஸிஜனேற்ற சல்பர் சேர்மங்கள் உள்ளன. வெங்காயத்தில் செலினியம் சத்து உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து ஆகும். மேலும், செலினியம் குறைபாடுள்ள நோயெதிர்ப்பு செல்கள் உள் செயல் முறைகளால் சேதப் படுகின்றன. இவ்வாறு சேதம் அடைந்த செல்கள் புரதத்தை உற்பத்தி செய்வதிலும் கால்சியம் சத்தை கொண்டு செல்வதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றன.

வெங்காயச் சாறு ஆஸ்துமா மற்றும் பிற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும் பயனளிப்பதாக சொல்லப் படுகிறது. வெங்காயச் சாற்றில் உள்ள குர்செடின்  என்னும் சேர்மம் வீக்கம் மற்றும் பிற ஒவ்வாமைகளையும் எதிர்த்துப் போராடுகிறது.

வெங்காயச்  சாற்றின் ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. வெங்காயத்தில் உள்ள சல்பர் கலவைகளான குர்செடின் மற்றும் குரோமியம் ஆகியவை நீரிழிவு எதிர் பண்புகளை கொண்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்