ஆவாரம் பூ எந்த முறையில் பயன்படுத்துவதால் என்ன பயன்கள் !!

ஆவாரம் பூவை ஊறவைத்து குடிநீர் ஆக்கி குடித்து வரும் பொழுது நாவறட்சி நீங்கும் மற்றும் கண் எரிச்சல் நீங்கும்.


ஆவாரம்பூவை உலர்த்தி பொடி செய்து நீர்  விட்டு அரைத்து குழப்பி புருவத்தின் மீது பூசி வர உடல் சூட்டினால் கண் சிவந்து போவது சரியாகும்.
 
ஆவாரம் பூவின் பொடியோடு காலையிலும் மாலையிலும் பசுநெய் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். ஆவாரம் பூவின் பொடியை பாலில் கலந்து  சாப்பிட்டு வர தேகம் பொன்னிறமாகும். மேக வெட்டை சரியாகும். உடலில் உப்புப் பூத்தல் சரியாகும்.
 
ஆவாரம் பூக்களை எடுத்து பாசிப்பருப்புடன் சமைத்து உண்டு வர சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். ஆவாரம் பூவுடன் கருப்பட்டி சேர்த்து குடித்துவர ஆண்குறி  எரிச்சல் நீங்கும்.
 
ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும். ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.
 
ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு  வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.
 
ஆவாரம் பூவுடன் ஊறவைத்த பாசிப்பயறு அரைத்து குளித்துவந்தால் உடலில் நமைச்சல், துர்நாற்றம் ஆகியவை நீங்கும். ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் போல் குடித்து வந்தால் உடல் குளுமை பெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்