இலவங்கப்பட்டையில் என்னவெல்லாம் மருத்துவகுணங்கள் உள்ளது...?

வெள்ளி, 1 ஜூலை 2022 (11:31 IST)
இலவங்கப் பட்டையானது இலவங்க மரத்தின் தண்டுகளை வெட்டுவதன் மூலம் உள்பட்டை பிரிக்கப்பட்டு அவை காய்ந்ததும் இலவங்கப்பட்டை சுருளாக மற்றும் குச்சிகளாக உடைக்கப்பட்டு பின் விற்பனைக்கு வருகின்றது.


அதிக வாசனையைக் கொண்டதாகக் காணப்படுவதால் உணவுடன் சேர்க்கும் போது உணவுக்கு சுவை கொடுப்பது மட்டுமல்லாது ஏராளமான நன்மைகளையும் கொடுக்கின்றது.

வயிற்றில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும். குறிப்பாக வயிற்றுப் பொருமல், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்ற அனைத்திற்கும் நிவாரணம் தரும். இலவங்கப் பட்டையில் உள்ள பினால் என்ற வேதிப்பொருளானது வாய்த் துர்நாற்றத்தை போக்கக் கூடியது.

இலவங்கப்பட்டையை நேரடியாக உட்கொள்ளும் போது ஏராளமான நன்மை கிடைக்கின்றன. மூட்டு வலியை போக்கச் சிறந்ததாகும். இலவங்கம் 90% மூட்டுவலியை போக்கும் திறன் கொண்டது.

தேவையற்ற கொழுப்பைக் குறைப்பதில் இலவங்கம் சிறப்பாக செயல்படுகின்றது. இலவங்கத்தை க்ரீன் டீயுடன் சேர்த்து உட்கொள்ளும் போது சிறந்த பயனளிக்கின்றது.

இன்சுலின் தடுப்பாற்றலை போக்குகின்றது. இன்சுலினை உடல் எளிதாக கிரகித்து உபயோகித்த பயன்படுகின்றது. இயற்கையான இன்சுலின் உற்பத்திக்கும் உதவுகிறது.

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்