பல்வேறு மருத்துவப்பயன்களை கொண்டுள்ள ரணகள்ளி மூலிகை !!

வெள்ளி, 1 ஜூலை 2022 (12:11 IST)
மருத்துவத்தில் இதன் இலை மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. இதன் இலை உடம்பில் பட்டால் சிவந்து தடித்து விடும் என்பதனால் கவனம் தேவை. இவை கிராமப்புறம் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் எளிதில் வளரக்கூடியது.


இலைகள் நீள்வட்ட வடிவில் காணப்படுவதுடன், நீர்ப்பற்றும் அதிகமாகக் காணப்படும். இலைகளின் விளிம்புகள் வளைவாகளாகக் காணப்படும். இலைகளின் விளிம்புகளிலிருந்து புதியதாக கன்றுகள் வளர்வதைக் காணலாம்.

ரணகள்ளித் தாவரமானது பல்வேறு மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. எனினும் ரணகள்ளி மூலிகையை மருந்தாக எடுத்துக் கொள்ளும் நாட்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் இறைச்சி மீன் முட்டை முதலான பொருட்களையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது முக்கியமாகும்.

 ரணகள்ளி இலையானது சிறுநீரகக் கற்களைக் கரைக்க மூலிகையாக பயன்படுகின்றது. தொடர்ந்து ஏழு நாட்கள் வரை ரணகள்ளி இலைகளைச் சாப்பிட்டு வந்தால் எவ்வளவு பெரிய சிறுநீர் கற்களாக இருந்தாலும் எளிதில் கரைந்துவிடும். சிறுநீர் கழிக்கும் போது எவ்வித வலியும் இன்றி வெளியேறும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ரணகள்ளி இலையை மென்று தின்று வந்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

உடலில் ஏற்படுகின்ற அனைத்து வகையான புண்களையும் மற்றும் வெட்டுக் காயங்களையும் போக்குவதற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகின்றது. இம் மூலிகை இலைகளைப் பறித்து நல்லெண்ணெயில் வதக்கி அடிபட்ட இடத்தில் வைத்து வந்தால் உடனே ரணம் ஆறிவிடும்.

ரணகள்ளி இலைச் சாற்றைப் பிழிந்து எடுத்து காதுச் சொட்டு மருந்தாக பயன்படுத்தினால் காது வலி நீங்கிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்