பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பலன்கள் என்ன...?

மாமிச உணவுகள் சாப்பிட்ட போதும், வேறு பல உடல் நல குறைபாடுகளாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுகின்றது.


இந்த பிரச்சனை உள்ளவர்கள், ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடித்த பின்பு, சிறிது பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
 
பெருஞ்சீரகங்களில் வைட்டமின் சி சக்தி அதிகமாக உள்ளது. இது உடலின் இரத்த சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் இருக்க செய்வதில் பெரும் உதவி புரிகின்றது. இதனால் நோயாளிகள் பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
 
பெருஞ்சீரகம் நீர் கோர்ப்பு பிரச்சனை உள்ளவர்கள் அவ்வப்போது பெரும் சீரகத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் சேர்ந்திருக்கும் அதிக அளவு நீரை, சிறுநீர் மூலமாக வெளியேற்றும் சக்தி கொண்டது இந்த பெரும் ஜீரகம்.
 
தினசரி ஒருமுறையேனும் சிறிதளவு பெருஞ்சீரகத்தினை நன்கு மென்று சாப்பிட்டு வர கல்லீரல் பலம் பெரும். அதில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் முழுமையாக நீங்கி, கல்லீரல் மற்றும் கணையம் போன்றவை தூய்மையாகும். கல்லீரல் தொற்று ஏற்படுவதை தடுக்கும்.
 
பெண்களை மாதந்தோறும் பாடுபடுத்தும் இயற்கை அமைப்பு மாதவிடாய் ஆகும். இந்த காலத்தில் சில பெண்களுக்கு அடிவயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு அதிகரிக்கின்றது. இந்த காலகட்டங்களில் பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பெண்களின் ஈஸ்ரோஜின் ஹார்மோன்கள் நன்கு தூண்டப்பெற்று மாத கால வலி மற்றும் இதர குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்றது.
 
நரம்புகளால் பாதிக்கப்பட்டவர்கள், பலருக்கும் ஆழ்ந்த தூக்கம் ஏற்படுவதில் பிரச்சனைகள் உண்டாகின்றது. பெருஞ்சீரகத்தின் மேக்னசிம் சத்து அதிகமாக நிரம்பி உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்