லவங்க பொடியை தேன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் என்ன பயன்கள்....?

தினமும் காலையில் தேனையும், லவங்கப்பொடியையும் கலந்து சுடுநீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போய்விடும்.

* தேனையும், லவங்கப்பொடியையும் சம அளவில் கலந்து இருவேளைகளிலும் சாப்பிட்டு வர காது மந்தம் குணமாகிவிடும்.
 
* உணவு உண்பதற்கு முன்பாக உணவில் 2 டீஸ்பூன் தேனுடன், சிறிது லவங்கப்பொடியை தூவிச் சாப்பிட அஜீரணம் குணமாகும்.
 
* என்றும் இளமையுடன் இருக்க மிதமான சுடுநீரில் 4 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் லவங்கப்பட்டைப் பொடியைக் கலந்து பருகி வர இளமை நிரந்தரமாகும்.
 
* தினமும் மூன்று வேளையும் 2 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் லவங்கப்பொடியை வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து குடித்துவர உடலில் உள்ள கொலஸ்ட்ரால்கள்  கரைந்துபோகும்.
 
* தேன், லவங்கப்பொடி இரண்டையும் சமஅளவில் எடுத்துக்கொண்டு ஒன்றாகக் கலந்து, சருமத்தில் ஏற்படும் நோய்களான சொறி, படைகள் மீது பூசி வர  குணமாகும்.
 
* தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு மிதமான சுடுநீரில் தேனையும், லவங்கப் பொடியையும் சேர்த்துக் குடித்து வந்தால் உடலின்  எடை குறையும்.
 
* 1 டீஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை சேர்த்து தினமும் 3 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்பின் வீரியம் குறையும்.
 
* சுடுநீரில் 1 டீஸ்பூன் தேனை ஊற்றி இளஞ்சூடாக்கி, அதனுடன் சிறிதளவு லவங்கப்பொடியைச் சேர்த்துச் சாப்பிட சைனஸ், சளி, இருமல் போன்ற பிரச்னைகள்  பறந்துபோகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்