பாதங்களை பராமரிப்பதற்கான சில எளிய டிப்ஸ் !!

சனி, 4 ஜூன் 2022 (17:58 IST)
சிலருக்குப் பாதங்களில் உள்ள சருமமானது தடித்து, வெடித்து, வறண்டு காணப்படும். இவர்கள் கட்டாயம் ஃபுட் கிரீம் உபயோகிக்க வேண்டும்.


யூரியா கலந்த லோஷன்களும் தடித்த தோல் பகுதியை மிருதுவாக்கும். எலுமிச்சைச்சாறு 1 கப், பட்டை தூள் கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் 2 டேபிள்ஸ்பூன், பால் கால் கப். இவை அனைத்தையும் 2 லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, அகலமான டப்பில் விட்டு, கால்களை 20 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

பிறகு பயத்தம் மாவும், பாலோடும் கலந்த கலவையால் பாதங்களைத் தேய்த்துக் கழுவி விடவும். வாரம் ஒன்றிரண்டு முறை, நேரம் கிடைக்கிற போது இந்தச் சிகிச்சையைச் செய்து வந்தால், பாத சருமம் பட்டுப் போலாகும்.

பாதாம் ஆயில் 1 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் 1 டேபிள்ஸ்பூன், வீட்ஜெர்ம் ஆயில் 1 டீஸ்பூன், 10 துளிகள் யூகலிப்டஸ் ஆயில். இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் நிரப்பி வைக்கவும். இதைப் பாதங்களுக்கான லோஷனாக உபயோகிக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்