நன்றாக தூக்கம் வர உதவும் சில மூலிகைகள் என்ன...?

திங்கள், 7 பிப்ரவரி 2022 (19:16 IST)
மணலிக் கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி இரவு நேரத் தில் தினமும் 2கிராம் அளவுக்கு சாப்பிட்டால் நன்றாக  தூக்கம் வரும்.


வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித் தால் நன்றாக தூக்கம் வரும்

ரோஜாப்பூ வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றில் தலா 50 கிராம் எடுத்து அரைத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்

மாம்பழச் சாறுடன் பால் கலந்து சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் தூக்கம் வரும்.

மருதாணிப் பூக்களை தலையணையின் அடியில் வைத்துத் தூங்கினால் நன்றாகத் தூக்கம் வரும்.

மணலிக் கீரையை உலர் த்திப் பொடியாக்கி தின மும் காலை, மாலை 2 வேளையும் சாப்பிட்டால் டென்ஷன் குறைந்து நல்ல தூக்கம் வரும்.

20 கிராம் கொத்தமல்லியுடன், 3 கிராம் கசகசா சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்