பயத்தங்காயில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக்கூடியது. அடிக்கடி காராமணி சாப்பிட்டால் தொற்று நோய்கள் எளிதில் அண்டாது.
கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து பயத்தங்காயில் அதிகமுள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு கூந்தல் சீக்கிரமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
பயத்தங்காயிலுள்ள நார்ச்சத்தானது எடைக்குறைப்புக்கு உதவி, நீரிழிவைக் கட்டுப் படுத்தி, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
பயத்தங்காய் வயிறு, கணையம் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்னைகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் சீரான குடல் இயக்கத்துக்கு உதவி, சிறுநீர் பாதை அடைப்பை சரிசெய்து, சிறுநீர் நோய்களையும் சரியாக்குகிறது.