புடலங்காயில் உள்ள வைட்டமின்களும் அதன் நன்மைகளும் !!

புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும்.


புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ்  போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.
 
சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுபடும். புடலங்காய் உடல் எடையை  கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
 
புடலங்காயில் தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் அதிக அளவு இருப்பதால் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை கொண்டது.  தலையில் உள்ள பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு. 
 
குடல் புண்ணை ஆற்றுவதற்கும் தொண்டை புண்ணை ஆற்றுவதற்கும் புடலங்காய் மிகவும் சிறந்தது. புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள  தேவையற்ற உப்புநீரை வியர்வை, மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
 
புடலங்காய் இலையானது குடல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்கிறது.
 
இதய கோளாறு உள்ளவர்கள், புடலங்காய் இலையின் சாறு எடுத்து நாள்தோறும், 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில், 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்